21 Jul 2016

விபத்தில் இளைஞன் பலி, அதிர்ச்சியில் அப்பம்மா மரணம்.

SHARE

(பழுவூரான்)


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் கோடமேட்டினை சேர்ந்த மகாலிங்கம் டினேஸ்குகன் (19 வயது) இன்று(21.07.2016) அதிகாலை விபத்தில் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில்
  தாந்தாமலை ஆலயத்திற்கு சென்றுவரும் போது மாங்காட்டில் மின்சாரக்கம்பத்துடன் மோதியதிலே இச்விபத்து இடம்பெற்றுள்ளது. இதனை கேள்வியுற்ற இளைஞனின் அப்பம்மா அதிர்ச்சியில் மரணித்துள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் அவர்கள் தெரிவித்தார்.

இரு சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: