29 Jul 2016

கிழக்கில் பிரமாண்டமான தனியார் வைத்தியசாலை அமைக்க கிழக்கு முதல்வர் மலேசிய முதல்வருடன் பேச்சு

SHARE
கிழக்கு மாகாணத்தில் சகல வசதிகளையும் கொண்டதான பிரமாண்டமான வைத்தியசாலை ஒன்றினை அமைக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட
மலேசிய ஜொஹோர் மானில முதலமைச்சரின் தூதுக் குழு மலேசிய தொழிற்துறை அபிவிருத்தி சிரேஷ்ட பிரதித் தலைவர் அமினுடீன் பின் தவம் தலைமையில் செவ்வாய்கிழமை (26) கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரைச் சந்திப்பு கிழக்கு முதலமைச்சரின் கொழும்பு காரியாலயத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினர்.

கிழக்கு மாகாணத்தில் பாரிய சகல வசதிகளையும் ஒருமித்ததான வைத்தியசாலை ஒன்றினை அமைத்து தனியார் துறையில் பட்டங்களை முடித்த பலருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதுடன் சகல நோய்களுக்குமான ஒரு சிறந்த வைத்தியசாலையை கிழக்கில் அமைப்பதால் கிழக்கில் பல அசெளகரியங்களுடன் வெளியிடங்களுக்குச் செல்வதனைத் தடுத்து காலடியிலேயே சிறந்த வைத்திய சேவையினை பெறும் வாய்ப்பினையும் கிழக்கு மக்களுக்கு வழங்கலாம் என்ற முதலமைச்சரின் எண்ணம் விரைவில் வெற்றியடைய வேண்டும் என்று  மலேசிய ஜொகோன் மானில தொழிற்துறை அபிவிருத்தி சிரேஷ்ட பிரதித் தலைவர் அமினுடீன் பின் தவம் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: