யாரோ பெற்ற பிள்ளைக்கு நாங்கள் பதிவு வைக்க வேண்டியுள்ளது. ஆய்வு கூடத்திறப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
பெரியகல்லாறு மத்திய கல்லூரி ஆய்வு கூடத்திறப்பு விழா அதிபர் செல்வராசா தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெரியகல்லாறு மத்திய கல்லூரி ஆய்வு கூடத்திறப்பு விழா அதிபர் செல்வராசா தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...
முன்னைய அரசாங்கத்தின் போது பாடசாலைகள் அபிவிருத்தி செய்கின்றபோது தமிழ் பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டது, மகாண அரசினால் சிபார்சு செய்து அனுப்பப்பட்ட போதும் மத்திய அரசு குறித்த திட்டங்களை முன்னெடுப்பதால் நாங்கள் பாராளுமன்றத்தில் இது சம்பந்தமாக பலதடவைகள் கதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பலத்த சிரமங்களை எதிர்நோக்கினோம். இந்த ஆய்வு கூடங்களுக்கான கல்வைக்கும் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரையும் அழைக்கவில்லை முன்னாள் பிரதியமைச்சர்,முதலமைச்சர் ஆகியோரிடம் கூறியிருந்தேன் நீங்கள் கல்வையுங்கள் நாங்கள் திறந்துவைக்க வருகின்றோம் என்று. அதுபோன்று இன்று நாங்கள் திறந்துவைத்துள்ளோம் இதனையிட்டு நாங்கள் பெருமைப்படுகின்றோம். கரணம் கல்வைக்கும் நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் முற்றாக புறக்கணிக்கப்பட்டுருந்தனர் ஆனால் திறப்பு விழாவில் முற்று முழுதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே கலந்து கொண்டுள்ளனர்.எதுவாக இருந்தாலும் இறைவன் நினைத்தபடிதான் நடக்கும் என்பதனை யாரும் மறந்து செயற்படக் கூடாது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடங்களை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்த அரசு என்ன செய்துள்ளது என்று சிந்தித்து பார்த்தால் இங்கு ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆட்சியில் இரண்டு கட்சிகள் இருக்கின்றது இந்த இரண்டு கட்சிகளையும் பலப்படுத்தும் வேலைகள்தான் கூடுதலாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
அபிவிருத்தி என்று சொல்லும் போது முன்னைய அரசு மேற்கொண்ட வேலைகளைத்தான் திறந்துவைக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டு இருக்கின்றது. இதேபோன்ற ஆய்கூடத்திறப்பு விழா ஒன்றில் கல்வி இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டிருந்தார். அவரிடம் நான் சொன்னேன் யாரோ பிள்ளையை பெற்றெடுக்க நாங்கள் பதிவுவைக்க வந்திருக்கின்றோம் என நான் பயிரங்கமாக கூறியிருந்தேன். இந்த அரசாங்கத்தின் மேல்நல்ல மதிப்பு மக்களுக்கு வரவேண்டுமாக இருந்தால் 1000 பாடசாலைதிட்டதினை தாண்டி பல திட்டங்களை அமுல்படுத்தி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதன் ஊடாக எமது மக்களுக்கு பலதரப்பட்ட தேவைகளை கோரிநிற்கின்றோம.; அவற்றினை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும். ஆனால் அவ்வாறான நிலமை இங்கு இல்லை அண்மையில் மட்டக்களப்பு வந்த ஜனாதிபதி வெபர் மைதாத்தினை திறந்துவைத்தார் அதுவும் முன்னைய அரசாங்த்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட திட்டமாகும் முன்னாள் முதலமைச்சர் கேட்கின்றார் நாங்கள் கல்லுவைக்க நீங்கள் திறந்துவைப்பதா? என்று. நீங்கள் கல்லுவைக்கம் நிலை ஒருபோதும் ஏற்படாது என்பதனை கூறிவைக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார்
0 Comments:
Post a Comment