4 Jul 2016

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த நால்வரும் மரணம்

SHARE
மட்டக்களப்பு – பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு –கொழும்பு நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்தியாய எனுமிடத்தில் கடந்த புதன்கிழமை மாலை (ஜுன் 29, 2016) 6.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நால்வரும் ஒருவர்பின் ஒருவராக அன்றைய தினமே மூவர் மரணித்திருந்தனர்.

படுகாயமடைந்த நிலையில் பொலொன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாலாமவரும் இன்று திங்கள் அதிகாலை (ஜுலை 04, 2016) மரணமாகியுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

அந்திக் கருக்கல் வேளையில் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்  சென்ற மாணவர்கள் இருவர் உட்படமூவர் அன்றைய தினமே மூவர் பலியாகினர்.

குடும்பஸ்தரான ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மத்  ஷியாம் (வயது 30) என்பவர் படுகாயமுற்று பொலொன்னறுவை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திங்கள் அதிகாலை மரணமாகியுள்ளார்.

ஜெயந்தியாய கிராமத்தைச் சேர்ந்த 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் கரீம் ஹஸ்மிர் (வயது 16) சனூஸ் இம்தாத் (வயது 16)   மற்றும் கூலித் தொழிலாளியான அதே கிராமத்தைச் சேர்ந்த நிஸ்தார் மிஸ்பாக் (வயது 20) ஆகியோரே அன்றைய தினம் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: