முற்று முழுதாக இயற்கை பசளைகளின் ஊடாக நஞ்சற்ற உணவு உற்பத்தி
அணுகு முறை திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் அறுவடை அரம்பிக்கப்பட்டள்ளன.
நஞ்சற்ற இயற்கை பசளையினை பயன்படுத்தி உணவு பயிர் உற்பத்தியினை ஊக்குவிக்கும் நோக்குடன் வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக அப்பிரதேச வளாகத்தில் இப்பயிர் உற்பத்தி திட்டம் மேற் கொள்ளப்பட்டிருந்து.
இதன் முதற் கட்டமாக விதைத்து நற்பத்தி ஜந்து நாட்களின் பின்னர் பச்சை பயறு அறுவடை வெள்ளிக்கிழமை (15) மேற்கொள்ளப்பட்டது.
முற்று முழுதாக நஞ்சுடன் கூடிய செயற்கை பசளையை பயன்படுத்தி உற்பத்தி மேற் கொள்கின்ற தற்காலத்தில் முற்று முழுதாக இயற்கை பசளையுடன் கூடிய நஞ்சற்ற உணவு உற்பத்தி வெற்றியளித்துள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment