13 Jul 2016

குருக்கள்மடத்தில் குருக்கேத்திரன் போர் வடமோடிக் கூத்தின் சட்டம் கொடுத்தல் நிகழ்வு

SHARE
(வ.சக்திவேல்)

கூத்துக்கலை சிறப்பான வளர்ச்சியைக் கண்டிருந்த மட்டக்களப்பு  குருக்கள்மடத்தில் கூத்துச் செயற்பாடுகள் சுமார் நான்கு தசாப்தங்களாக முடங்கிக் கிடந்தன. இந்நிலையில்
மீண்டும் கூத்துச் செயற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டும்
என்பதில் குருக்கள்மடம் கிராம மக்களும் அக்கிராமத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய நிர்வாகத்தினரும் ஆர்வம் காட்டியதற்கமைய கடந்த மாதம் குருக்கேத்திரன் போர் கூத்தை பழகுவதற்கான சகல முன் ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு தொடங்கிய கூத்துச் செயற்பாடு சட்டம் கொடுத்தல் நிகழ்வு வரையான படிநிலையைத் தாண்டியுள்ளது. இதுவொரு சந்தோசமானதொரு நிகழ்வாகும்.

குருக்கள்மடம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட கூத்து முன்னெடுப்புச் செயற்பாடு உணர்த்தும் உண்மை  கூத்துக்கலை ஒரு மக்கள் நிலைப்பட்ட மக்களின் பல்வேறு வாழ்வியல்களுடனும் தொடர்புடைய கலை என்பதாகும். அதனை நிகழ்துவதற்கு பொருத்தமற்ற அசாதாரண சூழல் காரணமாகவே கடந்த நான்கு தசாப்தகாலமும் அம்மக்களால் முன்னெடுக்கமுடியாது போனது என்பதை உணரமுடிந்தது. நீண்ட காலமாக பயில்வில் இல்லாதது கூத்துடன் தொடர்புடைய பல செயற்பாடுகளையும் சிதைதிருந்தது.

கூத்தை தொடர்ச்சியாக ஆடிவந்த கூத்தர் அண்ணாவியார் இல்லாது போனமை அதனை முகாமைத்துவம் செய்வதற்கு யாரும் முன்வராமை போன்ற காரணங்களால் கூத்தை நிகழ்த்துவதற்க்கு வாய்ப்பான சூழல் ஒரு காலகட்டத்தில் நிலவினாலும் அதனை அம்மக்களால் தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. இது மக்களின் புசிற்புக்குரியனவாகவே இருந்தன. அவர்களின் கூத்தின் மேலான ஆர்வத்தில் எந்தப் பின்னடைவும் ஏற்படுவதில்லை. அதனை மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்கு ஒருவர் முன்வரும் போது குறித்த கிராமமே அச்செயற்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான சகல ஆதரவுகளையும் வழகியது.

மேற்குறித்த அனுபவங்களை குருக்கள்மடம் கிராமத்தில் கூத்துச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. நவீன தொடர்புச் சாதனங்கள் புதிய வாழ்வியல் சூழல் எவ்வாறான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும் மக்களின் பண்பாட்டுடன் நிலைகொண்டுள்ள பாரம்பரியக் கலை தரும் அனுபவத்திற்கு இடானவையாக அவை அமைய முடியாது என்பதை குருக்கள்மடம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட கூத்துச் செயற்பாடுகள் உணர்த்துகின்றன.

03.07.2016 அன்று இடம்பெற்ற சட்டம்கொடுத்தல் நிகழ்வுக்கு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத் தலைவர் வீ.மகேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக கலாநிதி.எஸ்.ஜெயசங்கர் அவர்களும் சிறப்பு அதிதியாக தி..விமல்ராஜ் அவர்களும் கலந்து கொண்டனர். இக்கூத்திற்கான முன்னீடு முகாமைத்துவத்தை மேற்கொள்ளும் நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி..இன்பமோகன் அவர்கள் இந்நிகழ்வின் தொடக்கவுரையை நிகழ்த்தினார்.

குருக்கேத்திரன் போரில் வரும் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பாத்திரங்களுக்கு கூத்தர்கள் பொருத்தமானவர்கள் என இனங்காணப்பட்டு அண்ணாவியார் வே.தம்பிமுத்து அவர்களால் சட்டம் கொடுக்கப்பட்டது. இதில் குருக்கள்மடத்தில் பாரம்பரியமாக கூத்து ஆடிவந்த கூத்தர்கள் சிலரும் புதிய கூத்தர்கள் சிலரும் பாடசாலை மாணவர்களும் இணைந்துகொண்டனர்.

கட்டியங்காரன் .கேசியன், குருக்கேத்திரன் சு.சந்திரகுமார், சித்திரரேகை நி.கேமக்ஷன், கிருஷ்ணர் .வேல்சிவம், பரமசிவன், கா.அற்புதன், யமன் செ.சுகிலன், தர்மர் .புவி, அருச்சுணன் .ரவி, வீமன் கா.அற்புதன், நகுலன் செ.சுகிலன், சகாதேவன், சா.இரவீந்திரராஜா, திரௌபதி .சந்திரசிவம், இந்திரன் .ரேனுஜன்
துரியோதனன் வே.பாஸ்கரன், கன்னன் வே.லோகிதன், சகுனி .இராஜதிலகன், பெருந்திருவாள் .மதன், மந்திரிப.இராஜதிலகன்
நாரதர் யோ.றோகிலன், நாட்டியப் பெண்கள் ஜெ.பிரதீபன், .கேசியன், தோழிமார் ஜெ.பிரதீபன், .கேசியன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்தாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: