மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு – களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் ஞாயிற்றுக் கிழமை (10) காலை நடைபெற்றது.
கடந்த முதலாம் திகதி ஆரம்பமான இவ்வாலய வருடாந்த அலங்கார உத்சவத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று 9 ஆம் நாள் சனிக்கிழமை இரவு மாம்பழத் திருவிழா நடைபெற்றதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை காலை மூல மூர்த்தியாகிய பிள்ளையார் யானை வாகனத்திலும், சிவபெருமான் உமாதேவியார் சமேதராய் இடப வாகனத்திலும், முருகப்பெருமானும் வள்ளி தெய்வயானை சமேதராய் மயில் வாகனத்திலுமாக உள்வீதி வெளி வீதி வலம் வந்து ஆலய முன்றலில் அமையப் பெற்றுள்ள புனித தீர்த்தக்குளத்தில் தீர்த்தம் நடைபெற்றது.
ஆனி உத்தர நட்சத்திரத்தில் நடைபெற்ற இந்த தீர்த்தோற்சவத்தின்போது இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல்லாயிலக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தோடு, காவடி எடுத்தும், கற்பூரச்சட்டி ஏந்தியும், பறவைக்காவடி எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். ஆலய கிரியைகள் யாவும், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment