3 Jul 2016

நாற்பதாம் கிராமத்தில் இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பகுதியில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறியின் அடுத்தகட்டம் சனி, ஞாயிறு (02, 03) ஆகிய இரு தினங்களிலும், மட்.மண்டூர்
அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கேட்போர் கூடத்தில், நடைபெற்றது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப் பற்றுப் பிரிவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில், நாற்பதாம் கிராமம், திக்கோடை, இளைஞர் விவசாயத்திட்டம்,  ஆகிய கிராமங்களிலிருந்து 25 இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம், வேள்ட்விஸன் லங்கா, இலங்கை இளைஞர் சேவை மன்றம், மற்றும், போரதீவுப்பற்று பிரதேச கல்நடை அபிவிருத்திச் சங்கம், போன்ற அமைப்புக்கள் ஒன்றினைந்து இப்பயிற்சியை நடாத்தியிருந்தது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவரும், சிரேஸ்ட பயிற்றுவிப்பாளருமான த.வசந்தராஜா இதன்போது கலந்து கொண்டு பயிறிசி நெறியினை வழங்கினார்.

இதன்போது போரதீவுப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் எஸ்.அருளானந்தம், மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரதேச நிருவாக உறுப்பினர்கள், கால்நடை அபிவிருத்திச் சங்கத்தினர். உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதுபோன்ற பயிற்சி நெறி கடந்த வாரம் தும்பங்கேயிணில் நடைபெறமை குறிப்பிடத்தக்கதாகும்.




















SHARE

Author: verified_user

0 Comments: