9 Jul 2016

நாளை களுதாவளை பிள்ளையாரின் தீர்த்தோற்சவம்.

SHARE
(பழுவூரான்)
மீன்மகள் பாட வாவிமகள் ஆடும், முத்தமிழின் அரங்கமாய் திகழும் மட்டக்களப்பின் தென்பால் தமிழோசை மணக்கும், தமிழர் பண்பாடு தவழும், நெற்கதிர்கள்
சிரித்தாடும் இயற்கை அன்னையின் சுரங்கமாய் திகழும் கடலன்னை தாலாட்டும் களுதாவளைப் பதியினிலே கோயில் கொண்டு வீற்றிருக்கும் பிள்ளையாரின் தீர்த்தோற்சவம் நாளை(10.07.2010) இடம்பெற உள்ளது.
மூலமூர்த்தியாக வீற்றிருக்கும் விநாயகப் பெருமானை நெஞ்சார நினைத்து வழிபட்டால் தீராத வினைகளும் தீரும் என்பது அனைவரினதும் அசையாத நம்பிக்கையாகும். பேசாத பிள்ளையை பேச வைத்த பிள்ளையாரின் அருளால் இன்று பலர் இத்திருத்தலத்தை நாடி வந்து தங்களது குறைகளை பெருமானிடம் முறையிட்டு வழிபட்டால் அனைத்து தீரம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூர்;த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றும் இயற்கை எழில்கொஞ்சும் அமைதியான இடத்தில் அமைந்திருப்பது இன்னும அனைவரினதும் மனதை ஈர்க்கின்றது.
களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையாரின் தீர்த்தோற்சவம் நாளை 10.07.2016ம் திகதி, காலை 9.30 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திர திதியில் பக்தர்கள் புடைசூழ, மங்கள வாத்தியங்கள் முழங்க களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் தீர்த்தமாடும் காட்சியினை அனைவரும் தன்மனக்கண்ணூடாகவும், மெய்யுணர்வோடும் ஈடுபட்டு வழிபாடு செய்து ஆன்ம ஈடடேற்றம் பெறுவோமாக.

SHARE

Author: verified_user

0 Comments: