பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகத்தின் வழிகாட்டலின் கீழ் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.ஞானராசாவின் நெறிப்படுத்தலில் ஆரமபக்கல்விப் பிரிவு உதவிக் கல்விப்பணிப்பாளர் பா.வரதராஜன் ஆரம்ப ப்பிரிவு சேவைக்காலஆசிரிய ஆலோசகரின் உதவியுடன் 2016 ஆம் ஆண்டுதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும்செயற்பாடுகளை பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்விப் பிரிவு மேற்கொண்டுவருகின்றது.
அந்த வகையில் புதன் கிழமை (27) பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஓந்தாச்சிமடம் ஸ்ரீ சித்தி விநாயகர் பாடசாலையில் ஆரம்பப் பிரிவுவிஞ்ஞானமுகாம் நடைபெற்றது. ஆரம்பப் பிரிவு கலைத் திட்டத்தின்பிரகாரம் சுற்றாடல்சார்ந்த செயற்பாட்டு பாடப் பரப்பில் உள்ள விஞ்ஞான பரிசோதனைகளை செயற்பாட்டு ரீதியாக முன் வைத்து விஞ்ஞான முகாம் நடாத்தப்பட்டது.
ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விஞ்ஞான முகாமினைஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் நிருவாகத்திற்குப் பொறுப்பான
பிரதிக் கல்விப்பணிப்பாளர் மா.உலககேஸ்பரம்> கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஞானராசா மண்முனை தென்எருவில் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வி.திரவியராசா உதவிக் கல்விப் பணிப்பாளர்களான க.சுந்தரலிங்கம் க.குணசேகரம்> ஆரம்ப்ப பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி.ச.தில்லைநாதன் யுனிசெவ் பிரதிநிதி திருமதி. ரெபின்சியா பற்றர்சன் ஆகியோர் உட்பட பலர் கொண்டனர் .
0 Comments:
Post a Comment