மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இரசாமணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக பாடசாலை ரீதியாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு
பல உதவிவழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைப்பின் தலைவர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இதன் ஒரு கட்டமாக செட்டிபாளையம் மகா வித்தியாலயத்த்தில் வறிய மாணவர்களுக்கு வங்கி கணக்குகளை திறந்து கையளித்தலும், பாதணிகள் வழங்கும் நிகழ்வும் அதிபர் எஸ்.அருள்ராசா தலைமையில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது. இந் நிகழ்வில் அமைப்பின் தலைவர், ஸ்தாபகர் இராசமாணிக்கம் கீர்த்திவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தரம் ஒன்றில் கற்கும் மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வைப்பிட்டு 72 மாணவர்களுக்கு வங்கி புத்தகங்கள் கையளிக்கப்பட்டதுடன் 87 மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கிவைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment