எமது மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இளைஞர்கள் தொழிலின்றி வாழ்கின்ற போது வேறு மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர்களை எமது மாவட்டத்திற்குள் நியமித்தமை நல்லாட்சி அரசின்
மீது வெறுப்பை உண்டுபண்ணியுள்ளது என கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.
குறுமன்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தின் ஆய்வு கூட திறப்பு விழா அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் திங்கட் கிழமை (12) கடந்த இடம் பெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்….
எமது மாவட்டத்தில் பாதிக்கப்பட் இளைஞர்கள் தொழிலின்றி வாடுகின்ற நிலையில் எமது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பெரும்பான்மை இன சிற்றூழியர்களை நியமித்துள்ளமையானது இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது வெறுப்படைய செய்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டவர்கள் எமது மாகாண வைத்தியசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதான் நல்லாட்சி நல்லாட்சியென்றால் எமது மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இவ்வேலைவாய்ப்புகளை கொடுத்திருக்க வேண்டும். இதுவே நல்லாட்சியினுடைய கடமையாகும்.
இந்த நாட்டினுடைய ஜனாதிபதி அவரகள் வருகை தந்து உரையாற்றும் போது சொன்னார் இந்த மாவட்டத்திற்கும் எனக்கும் தொடர்பு இருக்கின்றது அதாவது சந்தேகத்தின் அடிப்படையில் 1971 ஆண்டு என்னை பிடித்து இங்குள்ள சிறைச்சாலையிலையே அடைந்து வைத்தனர். என வேதனைப்பட்டு கூறியிருந்தார் இன்று எமது சிறையில் வாடும் இளைஞர்கள் எத்தனைபேர் விசாரணையின்றி. எதுவித குற்றமும் செய்யாமல் வாடிக் கொண்டு இருக்கின்றனர் அவ்வாறென்றால் ஏன் ஜனாதிபதி அவர்கள் அவர்களை விடுதலை செய்ய முடியாது என நான் கேட்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment