23 Jul 2016

பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் நம் சகோதரிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கை

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பதவியேற்றதில்  இருந்து இன்றுவரை கிழக்கில் இருந்து எந்தவொரு பெண்களும் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லக்கூடாது. அதற்கான மாற்று நடவடிக்கைகளாக ஒவ்வொரு மாவட்டத்திலும்  
சிறுகைத் தொழில் மற்றும் இதர நடவடிக்கைகளை மேர்கொள்ள வேண்டும் இதற்காக அனைத்து அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையில் நடைமுறைப் படுத்தப்படும் நடவடிக்கையின் நான்காவது கட்டமாக வெள்ளிக்கிழமை (22) ஏறாவூரில் சுமார் 100 யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் பொருட்டு சகோதரிகளுக்கு உதவுவோம் எனும் தலைப்பில்  தொழில் பயிற்சி மையம் ஒன்று திறந்து வைக்கப் பட்டது.

குறித்த தொழிற் பயிற்ச்சி நிலையத்தின் திறப்பு விழாவில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இயங்கும் பிரபல சமூக சேவை அமைப்பான முஸ்லீம் கொடை நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் ஹாறூன் ரசீட் மற்றும் இணைப்பாளர் மிஸ்தார் அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி நிலையத்துக்கான  உதவிகளைச் செய்தனர். இன்றைய நிகழ்வில் நூற்றுக்கணகான வேலைவாய்ப்புக்களை எதிர்பார்த்திருக்கும் யுவதிகள் கலந்து 
கொண்டமை குறிபிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: