மட்டக்களப்பு களுதாவளைக் கிராமத்திற்கு கல்விச்சேவை ஆற்றிவரும் களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்தவரும், தற்போது லண்டனில் வசித்துவருபவருமான சர்வதேச சட்டத்தரணி கண்ணமுத்து சிதம்பரநாதன் அவர்களுக்கு களுதாவளை உதையதாரகை மன்றத்தினர் பாராட்டு விழா ஒன்றை சனிக்கிழமை (02) மாலை களுதாவளை கலாசார மண்டபத்தில் முன்னெடுத்திருந்தனர்.
களுதாவளை உதையதாரகை மன்றத்தினால் களுதாவளையில் முன்னெடுத்துவரும், கல்விப் பணிக்கு மேற்படி சர்வதேச சட்டத்தரணி கண்ணமுத்து சிதம்பரநாதன் உதவிவருகின்றார்.
இந்நிலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எழுதவுள்ள பட்டிருப்பு கல்வி வலய மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாழ்கள்களை அச்சிட்டு அவற்றை பட்டிருப்பு வலய கல்வி அலுவலகத்தின் ஆரம்பக்கல்விப்பிரிவு, உதவிக் கல்விப் பணிப்பாளர் வரதராஜனிடம் அன்றயதினம் சிதம்பரநாதன் கையளித்தார்.
சர்வதேச சட்டத்தரணி கண்ணமுத்து சிதம்பரநாதன் களுதாவளைக் கிராமத்திற்கு மாத்திரமின்றி இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்தி முன்னின்று செயற்பட்டு வருவதனைப் பாராட்டி பலரும் கருத்துத் இதன்போது தெரிவித்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, உள்ளிட்ட கிராம பெரியோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சர்வதேச சட்டத்தரணி கண்ணமுத்து சிதம்பரநாதனுக்கு களுதாவளை உதையதாரகை மன்றத்தினால் பொன்னாடை போர்தி வாழ்ந்துப்பா வழங்கி கிரீடம் வழங்கி கௌரவிக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment