நாட்டில் நல்லாட்சி நிலவுகின்ற காரணத்தினால் அனைத்து மத்ததவர்களும் அனைத்து இடங்களிலும் உலாவக்கூடிய நிலமை ஏற்பட்டிருக்கபின்றது. கடந்த ஆட்சியாளர்கள் சிறுபான்மையினராகிய, தமிழர்கள், முஸ்லிம்கள் என்று பாராமால், கடந்த காலங்களில் பல கொடுமைகளைச்
செய்தாலர்கள், அப்போது நாங்கள் பல அவலங்களைச் சந்தித்திருந்தோம். என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.நஸீர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மூ.கோ. என அழைக்கப்படும் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்களின் அகவை 50 எனும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (30) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள வெற்றிகலோ ஹொலிடே றெஸ்டூரன்றில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் இதன்போது கருத்து தெரிவிக்கையில்…
தமிழ் மற்றும் முஸ்லிங்கள் ஒன்றிணைந்து மாற்றியுள்ள நல்லட்சியைக் குழப்புவதற்காக முன்னைய ஆட்சியாளர்கள் வீதிக்கிறங்கி பேரணியாகச் செல்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஸவின் அனியினர் மீண்டும் இந்த நாட்டு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றுதான் பேரணிகளை நடாத்துகின்றார்கள்.
கடந்த கால அரசாட்சிக்காலத்தில் இல்லாதவை தற்போதைய நல்லாட்சிக்கால்தில் அனைத்து மக்களும், சுதந்திரமாகவும், நிம்மதியாகவும், சகோதரத்துவத்துடனும் வாழக் கூடியதாகவுள்ளது. இவ்வாறான நிம்மதிகளைக் குழப்புவதற்காகத்தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்குடன் மஹிந்த ராஜபக்ஸ அணியினர் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment