மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு –மட்டக்களப்பு நெடுஞ்சாலை புணானைப் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட வாகன விபத்தில் வாகனங்களைச் செலுத்திவந்த சாரதிகளில் ஒருவர் மரணமானதுடன் மற்றொரு சாரதியும் உதவியாளரும் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கihப்பற்றில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு வாடகை பஸ்ஸ{ம் வெலிக்கந்தைப் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு கோழிகளை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் கோழிகளை ஏற்றிச் சென்ற வாகன சாரதியின் கால் ஸ்தலத்தில் துண்டாடப்பட்டதோடு அவர் பொலொன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணித்து விட்டதாகத் தெரியவந்தள்ளது.
மேலும், சொகுசு பஸ்ஸை செலுத்திச் சென்ற அட்டாளச்சேனையைச் சேர்ந்த சாரதி ஐ.எல். நஜீம் (வயது 33) படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் கோழி லொறியில் உதவியாளரான திருகோணமலையைச் சேர்ந்தவர் பொலொன்னறுவை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment