முள்ளிப்பொத்தானை சிங்கள மஹாவித்தியாலயமும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் (இ.செ.ச) திருகோணமலைக் கிளையும் இணைந்து முள்ளிப்பொத்தானை சிங்கள மஹாவித்தியாலயத்தில் நடாத்திய இரத்ததான நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின்
திருகோணமலைக் கிளையின் தொண்டர்களும் கலந்து கொண்டனர். முள்ளிப்பொத்தானை சிங்கள மஹாவித்தியாலய அதிபர் எல்.எம்.எஸ்.லன்சகார, கந்தளாய் கல்வி வலய அழகியற்கலை உதவிப் பணிப்பாளர் ரனிக்கன் ஏ.லியனகே, திருமலை பொது வைத்திய சாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி திருமதி டாக்டர் தேவராஜா, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திருகோணமலைக் கிளை நிறைவேற்று அதிகாரி டாக்டர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்
இதன்போது இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திருகோணமலைக் கிளை நிறைவேற்று அதிகாரி டாக்டர் ரவிச்சந்திரன் அவர்கள் “இரத்ததானத்தினால் கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகள்” எனும் தலைப்பில் இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு ஒன்றினையும் நடாத்தினார். அக்கருத்தரங்கில் இரத்ததானம் செய்வதன் நோக்கம், இரத்ததானம் செய்யக்கூடியவர்கள் யார், செய்யக் கூடாதவர்கள் யார், இரத்ததானம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள், பயன்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.
தம்பலகமம் பொலிஸ் நிலைய பொலிஸ், முள்ளிப்பொத்தானை இராணுவ முகாம் வீரர்களும், கந்தளாய் மொபிடெல் நிறுவன அதிகாரிகள், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திருகோணமலைக் கிளைத் தொண்டர்கள், பொதுமக்கள், என பலர் பெருவாரியாகக் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி இம்மனிதாபிமான நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment