24 Jul 2016

அழகியற் கற்கை டிப்ளோமா முடித்தவர்களுக்கு பயிற்சிச் சான்றிதழ் வழங்கி வைப்பு

SHARE
அழகியற் கற்கைகள் டிப்ளோமா பயிற்சி நெறியை முடித்தவர்களுக்கு தேசிய தொழிற் பயிற்சி தகைமைச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதாக இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் மட்டக்களப்பு வந்தாறுமூலை தேசிய தொழிற் பயிற்சி நிறுவன அழகியற் கற்கைகள் பயிற்சிப் பேதனாசிரியை ஆர். விஷயனி சத்தியானந்தா (R. Vishayani Sathiyanantha Instructor for Beautician Course, National Vocational Training Instituteதெரிவித்தார்.

ஞாயிறன்று (ஜுலை 24, 2016) மட்டக்களப்பு வந்தாறுமூலை தேசிய தொழிற் பயிற்சி நிறுவன அழகியற் கற்கைகள் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆறு மாத கால அழகியற் கற்கைகளை நிறைவாகப் பூர்த்தி செய்து பிரயோகம், செய்முறை. மற்றும் அறிவுத் தேர்வுகளில் சித்தியடைந்த யுவதிகள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதோடு இங்கு வழங்கப்படும் தேசிய தொழிற் பயிற்சி தகைமைச் சான்றிதழ்களை ஒரு தராதரமாகக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்  கவர்ச்சிகரமான வருமானமீட்டக் கூடிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பயிற்சிப் போதனாசிரியை தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: