நாட்டில் அமையவிருக்கும் புதிய அரசியலமைப்புத் திட்டமானது சமஷ்டி அடிப்படையிலானதாகவே அமைந்திட வேண்டும். ஒற்றையாட்சி ஒருபோதும் பெருத்தமான அரசியல் தீர்வாக இருக்காது என்பதை இலங்கைக்கு விசேட விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கஉதவிச்
செயலாளர்களிடம் தெரிவித்துள்ளதாக கிழக்குமாகாணவிவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
இலங்கைக்குவிஜயம் மேற்கொண்டுள்ளஅமெரிக்க உதவிச் செயலாளர்களான நிஷா பிஸ்வால், டொம் மலிநவ்ஸ்கி ஆகியோர் புதன் கிழமை (13) கிழக்குமாகாண சபை உறுப்பினர்களுடன் மேற்கொண்டசந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
அன்றயத்தினம், கிழக்கு மாகாணசபைக் கட்டிடத் தொகுதியில் ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர்களான நிஷா பிஸ்வால், டொம் மலிநவ்ஸ்கி ஆகியோர் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்களுடன் விசேடசந்திப்பினை மேற்கொண்டு பலவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், தவிசாளர், பிரதித் தவிசாளர், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாணம் சார்பில் பல்வேறு விடயங்கள் அவர்களிடம் சுட்டிக் காட்டப்பட்டன. இந்த மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் வாழும் வகையில் அரசியற் பிரதிநிதிகள் ஒன்றுசேர்ந்து இந்த மாகாணசபை ஆட்சியை ஏற்படுத்தியுள்ளோம். அந்த வகையில் அது ஒருமுன்னேற்றப் பாதையில் சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றது என்பதையும் அவர்களுக்கு தெரியப்படுத்தினோம்.
இதன் போது அமெரிக்கஉதவிச் செயலாளர்களிடத்தில் என்னால் சிலவிடயங்கள் முன்வைக்கப்பட்டன, இலங்கையின் தொடர்பில் அமெரிக்கா காட்டுகின்ற அக்கறைக்கும் அதன் செயற்பாடுகளுக்கும் நன்றிகள். இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் புதிய அரசியல் அமைப்புத் திட்டமானது சமஷ்டி என்கின்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். ஐக்கிய அமெரிக்கா, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளில் இருப்பதைப் போன்று அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். சமஷ்டித் தீர்வின் மூலமே எமதுநாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகிடைக்கும்.அத்துடன் கடந்தகால யுத்தத்தின் போதும் தற்போதும் எமதுமக்களின் காணிகள் பல இராணுவத்தினரின் வசம் இன்னமும் உள்ளது. இவ்வாறு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட இடங்களை விடுவிக்க வேண்டும் அவற்றைப் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
போர்க்குற்ற விசாரணைகள் நீதியான முறையில் நடைபெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த பரிகாரம் வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் இருக்கும் ஏனைய மாகாணங்களைவிட வடக்கு கிழக்கு மாகாணங்கள் 30 வருடகாலம் பின்தள்ளியுள்ளது என்கின்ற அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்nடிகாள்ளப்பட வேண்டும். போன்ற பலவிடயங்கள் அவர்களிடத்தில் என்னால் முன்வைக்கப்பட்டுள்ளன, எனஅவர் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment