ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீடத்தின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸை மீண்டும் அதற்கு
உள்வாங்குவதற்கு தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ.காதிர் தெரிவித்தார்.
கூட்டுப் பொறுப்பை மீறி நடந்த காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸின் வேண்டுகோளின் பேரிலும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரிலும் தலைவர் ரவூப் ஹக்கீம் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், உலமா காங்கிரஸின் பிரதிநிதி என்ற பதவியை இடைநிறுத்தம் செய்வதாக எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் நிபந்தனையொன்றின் கீழ் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆகையால், மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸ் உலமா காங்கிரஸ் பிரதிநிதியாக இனிவரும் உச்சபீட கூட்டங்களில் கலந்துகொள்ளவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மன்சூர் ஏ காதிர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment