நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படாமல் இருந்த காத்தான்குடி கடைத்தெரு வடிகான் சாக்கடைகள் திங்கட்கிழமை
(ஜுலை 18, 2016) காத்தான்குடி நகரசபையினால் துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி வர்த்தக நகர் நெடுகிலும் உள்ள வடிகான்கள் சாக்கடைகளால் நிரம்பி துர்நாற்றமெடுத்து நுளம்புப் பெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கடைத்தெரு வர்த்தகர்களும், பொதுமக்களும், மாணவர்களும் கூடியிருந்தனர்.
இந்த வடிகான்களில் கழிவு நீருடன் பேணிகள், பிளாஸ்டிக் கொள்கலன்கள், பொலித்தீன் பைகள், இளநீர் கோம்பைகள் உள்ளிட்ட நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய பல்வேறு கழிவுப் பொருட்கள் அழுகிப்போன சாக்கடைகளில் காணப்பட்டன.
இந்த விடயம் இணையத்தள ஊடகங்களிலும் தேசியப் பத்திரிகையிலும் வெளியானதையடுத்து வெளியானதையடுத்து காத்தான்குடி நகரசபை சாக்கடைக் கான்களை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் திங்கட்கிழமை காலையில் இருந்து ஈடுபட்டுள்ளது.
சுமார் 12 நகரசுத்தித் தொழிலாளர்கள் இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், காத்தான்குடி நகர வடிகான்களில் சாக்கடைகள் கவனிப்பாரற்றுத் தேங்கிக் கிடந்த வியடம் பலரது அதிருப்தியையும் தோற்றுவித்திருந்தது.
காத்தான்குடி வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் என்பனவற்றுக்கு முன்னாலும் இந்த சாக்கடைக் கழிவுகள் கான்களை நிரப்பியிருந்தன. இதுவே மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது
0 Comments:
Post a Comment