கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லஹிறு சத்துரங்க வீரசேகரவை விடுதலை செய்யுமாறு கோரி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினால்
வந்தாறுமூலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜுலை 12, 2016) ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
“மாணவர் மீதான அராஜகத்தை நிறுத்து,” “ஜனநாயகத்தை வழங்குவோம் என்ற நல்லாட்சியின் உறுதிமொழி இதுதானா?” என்ற பதாதைகளைத் தாங்கியவாறு மாணவர்கள் கோஷமிட்டனர்.
சுமார் அரை மணிநேரம் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு முன்னால் உள்ள கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையோரமாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். பின்னர் மாணவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.
0 Comments:
Post a Comment