நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படாமல் இருக்கும் காத்தான்குடி கடைத்தெரு வடிகான் சாக்கடைகளில் நுளம்புப் பெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கடைத்தெரு வர்த்தகர்களும்,
பொதுமக்களும், மாணவர்களும் கூறுகின்றனர்.
இந்த வடிகான்களில் கழிவு நீருடன் பேணிகள், பிளாஸ்டிக் கொள்கலன்கள், பொலித்தீன் பைகள், இளநீர் கோம்பைகள் உள்ளிட்ட நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய பல்வேறு கழிவுப் பொருட்கள் அழுகிப்போன சாக்கடைகளில் கிடக்கின்றன.
நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், காத்தான்குடி நகர வடிகான்களில் சாக்கடைகள் கவனிப்பாரற்றுத் தேங்கிக் கிடக்கின்றன.
இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி அக்கறை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்கின்றனர்.
காத்தான்குடி மகாவித்தியாலயம் ஒன்றிற்கு முன்பாக வடிகான்களில் நிரம்பி வழியும் சாக்கடைகளையே படங்களில் காண்கிறீர்கள்.
0 Comments:
Post a Comment