7 Jul 2016

தும்பங்கேணியில் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை முன்னெடுப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள தும்பங்கேணிப் பகுதியில் இதுவரையில் எதுவித ஆரம்ப வைத்தியசாலைகளும் இன்றி அப்பகுதி மக்கள் அவர்களது சுகாதாரத் தேவைகளப்பூர்த்தி செய்வதில் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர் கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தும்பங்கேணிப் பிரதேசத்தை மையப்படுத்தி, காந்திபுரம், பிலாலிவேம்பு, களுமுந்தன்வெளி, இளைஞர் விவசாயத்திட்டம், சுரவணையடியூற்று, கற்சேனை, திக்கோடை, வம்மியடியூற்று, செல்வாபுரம், நவகிரி நகர், பனிச்சையடி முன்மாரி, மாவடி முன்மாரி, நாற்பதுவட்டை, தாந்தாமலை, உள்ளிட்ட பல கிராமங்களிலுள்ள பொதுமக்கள் அவர்களது சுகாதாரத் தேவைகளைப் பூர்தி செய்வதற்கு பல மைல்களுக்கு அப்பாலுள்ள களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, மற்றும் கல்முனை போன்ற தூர இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தும்பங்கேணிப் பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக எதிர் கொண்டு வரும் சுகாதார வசதியின்மை சம்மந்தமான பிரச்சனைகள் குறித்து அப்பகுதி மக்கள் தம்மிடம் பலதடவை முறையிட்டுள்ளனர்.

அம்மக்களின் கோரிக்கைக்கிணங்க இவ்விடையத்தை, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன், திங்கட்கிழமை (04) மாலை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரை அப்பகுதிக்குக் அழைத்துச் சென்று நிலமையினை நேரில் விளக்கியுள்ளேன். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

இப்பகுதியில் வைத்தியசாலை அவசியம் என உணர்ந்து கொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இப்பகுதியில் வைத்தியசாலை ஒன்று மாகாணசபையால் அமைத்துத்தரப்படும் என உறுதியளித்துள்ளதாகவும், இருந்த போதிலும், தற்போதைக்கு தற்காலிகத்தீர்வாக தும்பங்கேணியில் வாரத்திற்கு  இண்டு தடவைகள் தனியார் கட்டடத்தில் வைத்து ஆரம்ப வைத்திய சேவை ஒன்றை மேற்கொள்வதற்கு கிழக்கு அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், எனினும் மக்களின் நன்மை கருதி மிகவிரைவில் இவ்வைத்திய வேவை ஆரம்பித்து வைக்கப்படும் எனவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: