14 Jul 2016

அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

SHARE
அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
16 அத்தியவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட இருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டீ.எம்.கே.பீ தென்னகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலையில் இனிமேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களின் விபரங்கள் வருமாறு.
கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா
கோழி இறைச்சி (தோல் இன்றி) 495 ரூபா
சிவப்பு பருப்பு – 169 ரூபா
சீனி 1 கிலோகிராம் – 95 ரூபா
நெத்தலி (தாய்லாந்து) 1 கிலோகிராம் – 495 ரூபா
நெத்தலி (டுபாய்) 1 கிலோகிராம் – 410 ரூபா
கடலை 1 கிலோகிராம் – 260 ரூபா
பயறு 1 கிலோகிராம் – 220 ரூபா
டின் மீன் – 140 ரூபா
இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப்பால் மா – 810 ரூபா
உள்நாட்டு முழு ஆடைப்பால் மா – 735 ரூபா
கோதுமை மா 1 கிலோகிராம் – 87 ரூபா
உருளைக்கிழங்கு (உள்நாடு) 1 கிலோகிராம் – 120 ரூபா
பெரிய வெங்காயம் 1 கிலோகிராம் – 78 ரூபா
காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் – 385 ரூபா
கருவாடு (கட்டா) 1 கிலோகிராம் – 1100 ரூபா
கருவாடு (சால) 1 கிலோகிராம் – 425 ரூபா
மாசி 1 கிலோகிராம் – 1500 ரூபா
சஸ்டஜன் பால்மா – 1500 ரூபா



SHARE

Author: verified_user

0 Comments: