இலங்கைக்கான அமெரிக்காவின் அபிவிருத்தி உதவிகளில் அதிகரிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் சர்வதேச உதவிகளிற்கான அமெரிக்க நிலையத்தின் (யுஎஸ்எயிட்) இலங்கை மற்றும் மாலைதீவிற்கான புதிய இயக்குநராக கலாநிதி அன்ரூ சிசன் பொறுப்பேற்றார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலாநிதி அன்ரூ சிசனின் மனைவி கரன் லெவின் பங்குபற்றலுடன் அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் அலுவலக சத்தியப்பிரமாணத்தை செய்து வைத்தார்.
“அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் முன்னொருபோதும் இல்லாத ஓத்துழைப்புகள் காணப்படும் இந்த தருணத்தில் இலங்கைக்கான வெளிநாட்டு உதவியை நிர்வகிக்கும் பொறுப்பை சிசன் ஏற்றுக்கொண்டுள்ளமை எமக்கு மிகச்சிறந்த விடயம்” என தூதுவர் கேஷாப் தெரிவித்தார். உலகின் பல பாகங்களில் யுஎஸ்எயிட் நிகழ்ச்சித் திட்டங்களை நிர்வகிப்பதில் அவர் தலைமத்துவம் வகித்தமையும் அவரிற்கு அதில் உள்ள நீண்ட அனுபவமும் இலங்கையிலும் மாலைதீவுவிலும் அதிகரித்து வரும் மக்களிற்கு எங்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கும் எனவும் கேஷாப் தெரிவித்தார்.
அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கைக்கான அபிவிருத்தி உதவி துரிதமாக அதிகரித்துள்ளதை கையாள்வதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கைக்கான யுஎஸ்எயிட்டின் இயக்குநராக சிசன் பொறுப்பேற்றுள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கைக்கான அபிவிருத்தி உதவி 2015-2016ம் ஆண்டுகளில் 8.7பில்லியன் இலங்கை ரூபாயாக காணப்படும் (60 மில்லியன் அமெரிக்க டொலர்).
இலங்கை மற்றும் மாலைதீவுகளுடனான நீண்டகால உறவுகள் காரணமாக அமெரிக்க மகிழ்ச்சியடைவதுடன் நன்மையும் அடைந்துள்ளது என கலாநிதி சிசன் தெரிவித்தார். எங்கள் மக்கள் மத்தியிலான உறவுகளை இந்த முக்கியமான தருணத்தில் மேலும் பலப்படுத்துவதற்கு உதவவுதற்காக இங்கு வரமுடிந்துள்ளதை நான் மிகவும் கௌரவமான விடயமாக கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
1956ம் ஆண்டு முதல் அமெரிக்க அரசாங்கம் இலங்கையின் பல்வேறுபட்ட பகுதிகளும் நன்மையடைவதற்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கை அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி சீர்திருத்தங்கள், நல்லிணக்கம், நிலைமாற்றுக்கால நீதி, மற்றும் உள்ளுர் சமூகங்களை பலப்படுத்துதல் போன்றவற்றை மையமாகக் கொண்ட அர்த்தப்பூர்வமான முன்னேற்றங்களை காணும் இத்தருணத்தில் அமெரிக்கா இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கும்.
மாலைதீவிற்கு இலங்கை 2001ஆம் முதல் பல்வேறு முயற்சிகளிற்காக தனது உதவியை வழங்கி வருகின்றது, நாட்டின் சக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கு காற்று வலுவை
பயன்படுத்துவதற்காகவும், அரச ஸ்தாபனங்களின் செயற்திறனை அதிகரிப்பதற்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது வரை யுஎஸ்எயிட் 207 மில்லியன் மாலைதீவு ரூபியாவை காலைநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக வழங்கியுள்ளது.
கலாநிதி சிசன் உலகின் பல பகுதிகளில் யுஎஸ்எயிட் முன்னெடுத்த பாரிய அபிவிருத்தி திட்டங்களில் 20 வருடத்திற்கும் மேற்பட்ட அபிவிருத்தி அனுபவத்தை உடைய மூத்தவெளிவிவகார சேவை அதிகாரி. இந்தோனேசியா, பாகிஸ்தான், கொசோவோ, மத்திய ஆசியா, மற்றும் கிழக்கு ஆபிரிக்க பிராந்தியங்களில் அவரிற்கு பணியாற்றிய அனுபவம் உள்ளது. இதற்கும் அப்பால் சிசன் யுஎஸ்எயிட்டின் வாசிங்டனில் உள்ள சர்வதேச அபிவிருத்தி பரிசோதனை கூடத்தில் உதவி நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள பல மில்லியன் கணக்கான மக்களிற்கு பலனளிக்க கூடிய சிறந்த தீர்வுகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.
0 Comments:
Post a Comment