பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமம் தான் கச்சக்கொடி. அருகே வேலோடு இருந்து வினை தீர்க்கும் தாந்தாமலை முருகப்பெருமானும் இருந்தும் பயன் ஏது? என்கின்ற ஏக்கத்தோடும்
எப்போது விடியும் என்ற மனநிலையோடும் வாழ்கின்றார் பாக்கியம். 1990 ஆம் ஆண்டு வன்செயலுக்கு பிற்பாடு இங்கே குடியேறி வாழ்ந்து வருகின்றார். இக்கிராமத்தில் அண்ணளவாக 68 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
இதுவரைக்கும் தனது வீட்டை இரண்டு தடவைகள் காட்டுயானைகள் தாக்கியது. வீடு உடைந்த நிலையில் எதுவிதமான பாதுகாப்புமின்றி தான் தனது பேரப்pள்ளையுடன் வாழ்ந்து வருவதாகவும் பேரப்பிள்ளைக்கு நிர்க்கதி எதுவுமில்லை என்கின்றார். வீடு உடைந்த போதும் அதனை வந்து யாரும் இதுவரைக்கும் கேட்டதுமில்லை உதவி புரிந்ததுமில்லை. வன்செயலால் பாதிக்கப்பட்டமையினால் கொடுக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தினை முழுமையாக முற்றுப்பெறாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அடிப்படை வசதிகளன்றி வாழும் எமக்கு எந்த விதமான அரசியல்வாதிகளும் எம்மை கண்ணெடுத்துப் பார்ப்பார் யாருமில்லை. தேர்தல் திருவிழா என்றால் மாத்திரம் நாங்கள் காண்கிறோம் பின்னர் அவர்களை நாங்கள் காண்பதே கிடையாது. அவர்களுடைய எந்தவிதமான உதவியும் எங்களை வந்தடைவதில்லை என கலங்கினார்.
இதனை அறிந்த சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் இ.சாணக்கியன் அவர்கள் நேரடியாக கச்சக்கொடியில் உள்ள காட்டுயானையினால் பாதிக்கப்பட்ட பாக்கியம் அவர்களின் வீட்டிற்கு சென்று உடைந்த வீட்டினை புனரமைப்புக்காக நிதியுதவி வழங்கினார்.
0 Comments:
Post a Comment