சனிக்கிழமை இரவு (ஜுலை 02, 2016) நடந்துள்ள இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வழமையாக கடலுக்குள் படகுகளைத் தள்ளிவிடும் ஏறாவூர் - தளவாய், சின்னத்தம்பி வீதியைச் சேர்ந்த கிட்ணப்பிள்ளை கண்ணன் (வயது 35) சனிக்கிழமை இரவும் தளவாய் கடற்கரைக்குச் சென்று படகுகளை கடலுக்குள் தள்ளிவிடும் தொழிலில் ஈடுபட்டிருந்துள்ளார்.
மாலை ஏழு மணியளவில் இவரும் மற்றொருவருமாகச் சேர்ந்து படகொன்றை கடலுக்குள் தள்ளிவிடும் போது மற்றையவர் கரையேற இவர் விழுந்து விட்டார்.
மற்றையவர் கூப்பிட்டுத் தேடியும் கடலலை இழுத்துச் சென்று விட்டதால் கடலுக்குள் விழுந்தவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஞாயிறு (ஜுலை 03) காலையிலேயே மீனவர்கள் சடலத்தைத் தேடிக் கண்டுபிடித்தனர்.
இறந்தவர் சம்பவ தினத்தன்று சற்று அதிகமாக மது அருந்தியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இறந்தவரின் மனைவி மத்திய கிழக்கு நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். இவருக்கு 4 பிள்ளைகள் உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment