மட்டக்களப்பு கல்குடாத் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் உட்பட 50 பேர்
ஸ்ரீலமுகாவில் இணைந்து கொண்டுள்ளதாக ஸ்ரீலமுகா பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கல்குடாத் தொகுதியைச் சேர்ந்தவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், வாழைச்சேனை காகித ஆலையின் தவிசாளருமான அன்வர் நௌஷாத் தனது ஆதரவாளர்கள் சகிதம் வியாழக்கிழமை (ஜுலை 21, 2016) மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் கேட்போர் கூடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த அன்வர் நௌஷாத் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்னிலையில் தாம் ஸ்ரீலமுகா வில் இணைந்து கொண்டுள்ளதாக அறிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஷிப்லி பாறூக், ஏ.எல். தவாம், எச்.எம். லாஹிர், ஆரிப் சம்சுதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.
அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கட்சியில் இணைந்து கொண்டவர்களை வரவேற்றுப் பேசிய முதலமைச்சர் ஸ்ரீலமுகா வின் வெளிப்படைத் தன்மைக்கும் அதன் செயற்திறனுக்கும் மாற்றுக் கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலமுகா வில் வந்து இணைந்து கொள்வது சிறந்த உதாரணம் என்றார்.
0 Comments:
Post a Comment