3 Jul 2016

அந்நூர் பௌண்டேசனின் ஏற்பாட்டில் 250 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

SHARE
தன்னார்வ சமூக சேவைத் தொண்டு நிறுவனமான அந்நூர் பௌண்டேசனின் ஏற்பாட்டில் ஏறாவூர் நகரப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 250 வறிய
குடும்பங்களுக்கு ஞாயிறன்று (ஜுலை 03, 2016) உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் எம். செய்யதலி தெரிவித்தார்.

அத்துடன், மத்திய கிழக்கு மற்றும் சுவிற்ஸர்லாந்து நாட்டு பரோபகாரிகளின் கொடை மூலம் இந்த சமூக சேவைப் பணிகள் நிறைவேற்றப்படுவதாகத் தெரிவித்த அவர் எதிர்காலத்தில் வறிய குடும்பங்களுக்கு நிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் மலசல கூட வசதியும் செய்து கொடுக்க உத்தேசித்திருப்பதாகவும் கைம்பெண்களுக்கு மறுவாழ்வு உட்பட வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட 250 வறிய குடும்பங்களுக்கு 10 கிலோகிராம் அரிசி உட்பட உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிறன்று ஏறாவூர் அல் அக்ஸா கிராமத்தில் அந்நூர் பணியாளர் எம்.எல். அப்துல் றஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.

வறிய குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் இந்நிகழ்வில் அந்நூர் தன்னார்வ சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் எம். செய்யதலி, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட அந்நூர் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: