மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் அதிபராகவிருந்து கடமைபுரிந்த எஸ்.அலேசியஸ் என்பவர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதையடுத்து இவ்வியத்தியாலயத்திற்கு
புதிய அதிபராக களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த பே.காப்தீபன் நியமிக்கப்பட்டு திங்கட் கிழமை (06) கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய அதிபர் பே.காப்தீபனை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்கத்தினர், மாணவர்கள், பழைய மாணவர்கள் உட்பட அனவரும் ஒன்றிணைந்து வரவேற்று, பின்னர் புதிய அதிபர் பேரின்பம் காப்தீபன் கடமையினைப் பெறுப்பேற்றுக் கொண்டார்.
மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தின் பழைய மாணவாரான இவர் இலங்கை கல்வி நிருவாக சேவையில் தரம் 3 இல் சித்தியெய்தி, கொழும்பு றோயல் கல்லூரியின் பிரதியதிபராகக் கடைமை புரிந்து பின்னர் மட்.பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடைபுரிந்த இவரை தற்போது மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment