20 Jun 2016

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் அற்புதப் பாடல்கள் அடங்கிய நூல் மற்றும் ஒலிப்பேழை வெளியீட்டு விழா.

SHARE
மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் அற்புதப் பாடல்கள் அடங்கிய நூல் மற்றும் ஒலிப்பேழை என்பன வெளியீட்டு வைக்கப்படவுள்ளன. 
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் திருவருள் நூல் வெளியீட்டுக் குழுவின் தலைவர் சி.குலசேகரம் தலைமையில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலநிதி.மூ.கோபாலரெத்தினம், கலந்து கொள்ளவுள்ளார். மேலும் இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் ஓய்வு நிலை பிராந்திய முகாமையாளர் கலாநிதி, கலாபூசணம்,இரா.நல்லையா, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி.சி.அமலநாதன், கிழக்குப் பல்கலைக் கழக பேராசிரியர்.வே.குணரெத்தினம், கிழக்குப் பல்கலைக் கழக சிரேஸ்ட உதவிப் பதிவாளர் அ.பகிரதன், உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது பாடலாசிரியர், பாடகர்கள், இசையமைப்பாளர் ஆகிய கலைஞர்களும் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: