7 Jun 2016

சான் அல்விஷ் - மாணவனின் விபத்தினையை ஏன் ரோயல் கல்லுாாி மூடி மறைத்தது?

SHARE
(அஷ்ரப் ஏ சமத்)

கொள்ளுப்பிட்டி 297 வத்தையில்  தந்தை இழந்து  வசித்த வந்த மாணவன்  சான் அல்விஸ் வயது (17)சிறந்த விளையாட்டு வீராரக திகழ்ந்தான் அவா் கொழும்பு ரோயல் கல்லுாியில் 2013ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு கல்விகற்றுக் கொண்டிருந்தான்.  நீச்சல் துறையிலும் கல்வியிலும் மிகவும் ஆர்வம் கொண்டு விளங்கிய இம் ஏழை மாணவன் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பிறந்தாலும் அவா் ஒரு முடுக்கு வீட்டிலேயே தனது தாயுடன் வாழந்து வந்தான். 

இம் மாணவன்  கல்லுாாியின் நீச்சல் பிரிவு, சாரணா் போன்ற துறைகளில் சிறு வயதில் இருந்தே  சிறந்து விளங்கினான்.  அவன் கொழும்பு ரோயல் கல்லுாாியில் நீச்சல் பயிற்சியில் 2013 மாா்ச் 20ஆம்  திகதி  ஈடுபட்டு கொண்டிருக்கையிலேயே   தனது தலை நீச்சல் தடாகத்தில் அமுழ்க்கப்பட்டு முச்சுத் தினறியதாகவும் ஒட்சிசன் இல்லாமல் தடாகத்தில் கிடந்ததாகக்  கூறப்பட்டுள்ளது. அப்போது அங்கு கடமையில் நீச்சல் பயிற்சி போதானாசிரியர் இருக்க வில்லையா? சக மாணவா்கள் பயிற்சியில்  ஈடுபட வில்லையா, சீ.சீ. டி கமார அங்கு இருக்க வில்லையா ? என ஊடகங்கள் சந்தேகங்களை கிளப்புகின்றனா, 

மேலும்  இம் மாணவன் கடந்த 3 வருடங்களாக தனது சிறு வீட்டிற்குள்ளேயே   கோமா நிலையிலேயே  வாழ்ந்து வருகின்றான்.  இம் மாணவனுக்கு நடந்த சம்பவங்கள் என்ன,? .  இம் மாணவனின் சக மாணவா்கள் தற்போது க.பொ. த உயா்தரம் வரை  கற்கின்றனா். ஆனால் இம் மாணவன் தனது 9 வகுப்பில் ஏற்பட்ட  சம்பவத்தினால் வீட்டில் நோயினால் படுத்த படுக்கையுடன்  வாடுகின்றனான். 

 சான் அல்விசின்  வாழ்க்கைக்கு உலை வைத்தவா்கள்  யாா் ? ஏன் இந்த மாணவனுக்கு நடந்த நீச்சல் பயிற்சியின்போது  நடந்த அணியாயங்கள் ஏன் அப்போதே  ரோயல் கல்லுாாியின் அதிபா், ஆசிரியா்களினால் நிறுவாகத்தினால்  ஊடகங்களுக்கு கொண்டு வரவில்லை. ஒரு தந்தை இழந்த ஓர் ஏழை மாணவன் அதுவும் முடுக்கு வீட்டில் வா ழ்ந்தவன்  என்பதனால் அவருக்கு நடந்த விபத்து வெளிவராமல் கல்லுாாியினால்  தடுக்கப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.
 3 வருடங்களுக்குப் பிறகு அம் மாணவன் குடியிருந்த வீடும் கூட  வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நீக்கப்பட்ட பின்பே அம் மாணவனின் கதை  நோய்யுற்றிருப்பது பற்றியும்   குடியிருப்பதற்கு வீடொன்று இல்லாமல் தனது தாயும் தங்கையுடன் நடு வீதியில் உள்ளான் என்ற அவல நிலை முதலில் முகநுாலிலும் வெளிவந்தன. அதன் பின்பே அதனைத் தொடா்ந்து ஊடகங்களும் இம் மாணவனின் கதையை கடந்த வாரம்  வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

இதனை அவதானித்த வீடமைப்பு அமைச்சா் சஜித் பிரேமதாச இன்று(31)ஆம் திகதி   அலறி மாளிகையில் வைத்து பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு மருதானையில் 797 வத்தையில் நிர்மாணிக்கப்பட்ட தொடா் மாடி வீட்டின் கீழ் மாடியில் மிகுதியாக இருந்த ஒரு வீட்டினை 36 இலட்சம் பெறுமதி வாய்ந்த வீட்டின் திறப்பை மாணவனின் தாயிடம் இலவசமாக வழங்கி  வைத்தனா்.  






SHARE

Author: verified_user

0 Comments: