மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஜுன் 28, 2016) மாலை ஐந்து மணியளவில் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.
இது விடயமாக கசாணாமல் போன மீனவரின் உறவினர்கள் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் மீனவர்களமாகச் சேர்ந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
காத்தான்குடி - பூநொச்சிமுனையை வசிப்பிடமாக கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான எம். பதூர்தீன் (வயது - 38) எனும் மீனவரே காணாமல் போயுள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவும் தேடுதல் இடம்பெற்றது. இவர் வேறு பகுதிக்கு கடல் அலையால். அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று மீனவர்கள் நீரோட்டத்தை வைத்து ஊகித்துக் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தேடுதல் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை பொலிஸ் விசாரணைகளும் இடம்பெறுகின்றன.
0 Comments:
Post a Comment