மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பல பாடசாலைகளில் மிக நீண்டகாலமாக அதிபர்கள் இல்லாமல் இயங்கி வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணிக்கு இன்று சனிக்கிழமை (25) அறிவித்துள்ளார்.
பாடசாலைகளைத் தலைமை தாங்கி நடாத்தும் அதிபர்கள் இன்மையால் பாடசாலைகளை முன்நெடுத்துச் செல்வதில் பாரிய சவால்களை எதிர் கொண்டுள்ளதாக சம்மந்தப்பட்ட பாடசாலைகளின், பெற்றோர்களும், பழைய மாணவர்களும், மேற்படி கிழக்கு மாகாண சபை உறுப்பினருக்கு முன்வைத்த கோரிக்கைக்கிணங்க தான் இதுதொடர்பான கடித்தை கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர், மா.நடராசா தெரிவித்தார்.
மட்.பட்.சின்னவத்தை அ.த.க.பாடசாலை தரம் iii, மட்.பட்.ஆணைகட்டியவெளி அ.த.க.பாடசாலை தரம் iii, மட்.பட்.பெரியகல்லாறு புனித அருளாந்தர் அ.த.க.பாடசாலை தரம் iii, மட்.பட்.களுதாவளை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை தரம் iii, மட்.பட்.வெள்ளிமலைப்பிள்ளையார்அ.த.க.பாடசாலை தரம் iii, மட்.பட்.மாலையர் கட்டு அ.த.க.பாடசாலை தரம் iii, மட்.பட்.மண்டூர் 39 அ.த.க.பாடசாலை தரம் iii,மட்.பட்.மண்டூர் 40 அ.த.க.பாடசாலை தரம் ii, மட்.பட்.காக்காச்சிவட்டை அ.த.க.பாடசாலை தரம் ii, மட்.பட்.மண்டூர் மகாவித்தியாலயம் பாடசாலை தரம் iC
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகள் நீண்டகாலமாக நிரந்தர அதிபர்களோ அல்லது கடைமை நிறைவேற்று அதிபர்களோ இல்லாமல் இயங்கி கொண்டிருக்கின்றன எனவே இப்பாடசாலைகளுட்கு கூடிய விரைவில் அதிபர்களை நியமனம் செய்து இப்பாடசாலைகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு அனுமதிக்குமாறு தயவாய் வேண்டி நிற்கின்றேன் என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் என்னால் முன் வைக்கப்பட்டுள்ள இக்கோரிக்கைக்கமைவாக மிகவிரைவில் மேற்படி பாடசாலைகளில் வெற்றிடமாவுள்ள பாடசாலைகளுக்கு நிரந்தர அதிகர்கள் நியமிக்கப்படும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு உறுதியளித்துள்ளதாகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர், மா.நடராசா மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment