மட்டக்களப்பு – களுதாவளை அருள்மிகு சுயம்பிலிங்கப் பிள்ளையார் அலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா எதிர் வரும் 01.07.2016 அன்று ஆரம்பமாகி 10.07.2016 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளதாக ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.இதில் முதலாம், இரண்டாம் திருவிழாக்கள் பிள்ளையார் ஆலயத்தின் சார்பிலும், 3 ஆம் நாள் திருவிழா வள்ளி நாயகி குடும்ப மக்களாலும், 4 ஆம் நாள் திருவிழா செட்டி குடும்ப மக்களாலும், 5 ஆம் நாள் திருவிழா போற்றி நாச்சி குடும்ப மக்களாலும், 6 ஆம் நாள் திருவிழா சுரக்கா மூர்த்தி குடும்ப மக்களாலும், 7 ஆம் நாள் திருவிழா பேனாச்சி குடும்ப மக்களாலும், 8 ஆம் நாள் திருவிழா பெத்தாக்கிழவி குடும்ப மக்களாலும், 9 ஆம் நாள் திருவிழா மேற்படி 6 குடும்ப மக்களும் ஒன்றிணைந்து நடாத்தும் பொதுத் திருவிழாவும், நடைபெற்று அன்றயதினம் நள்ளிரவு 12 மணிக்கு பஜனாவழி இசைமன்றத்தின் அனுசரணையுடன் நடைபெறும், மாம்பழத் திருவிழாவும், 10 ஆம் நாள் அதிகாலை திருப்பொற்சுண்ணமும், காலை 9 மணிக்கு ஆலய முன்றலில் அமைந்துள்ள தீர்த்தக் குளத்தில் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
ஆலய கிரியைகள், பூஜைகள் யாவும், ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சு.கு.விநாயகமூர்தி குருக்கள் தலைமையிலான குழுவினார் மேற்கொள்வர்.
விழாக்காலங்களில் தினமும் பொதுமக்களின் ஆதரவுடன் களுதாவளை இந்து இளைஞர் மன்றத்தினரின் அன்னதான நிகழ்வும் இடம்பெறுவதோடு, பொது மக்களின் வசதி கருத்தி போக்குவரத்து ஒழுங்குகளும், செய்யப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment