8 Jun 2016

மட்டக்களப்பு மாவட்ட கிராம சேவையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் கிராம
சேவையாளரகள் தங்களது கடமையினை அச்சமின்றி மேற்கொள்வதற்கான நிலையினை ஏற்படுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்ட கிராம சேவையாளர்கள், புதன்கிழமை (08) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம் விடுத்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளங்களிலும் புதன்கிழமை (08) காலை, கடமைக்கு வந்த கிராம சேவையாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஞானசிறி தலைமையில் போராட்டம் இடம்பெற்றது. கிராம சேவையாளர்கள் கடமையாற்றும்போது சீருடை தரித்தவர்கள் அதில் தலையிடுவது, சிவில் நடவடிக்கைகளைக் குழப்பும் நடவடிக்கையென இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கிரானில் இராணுவத்தினரால் கிராம சேவையாளர் ஒருவர் தாக்கப்பட்டு அவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் தாக்கியதாகக் கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினர் விடுதலைபெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர்கள் இதன்போது  தெரிவித்தார்











SHARE

Author: verified_user

0 Comments: