மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப் பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாழ்வின் உதயம் எனும், மற்றுத் திறனாளிகள் அமைப்பின் அவையவங்களை இழந்த முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக கிழக்குமாகாண விவசாய அமைச்சரின் தனிப்பிட்ட நிதியில் இருந்து வாழ்வாதார உதவிகளை திங்கட் கிழமை (13) வழங்கி வைத்தார்..
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்நிதியுதவிகளை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேகச் செயளலாளர் மற்றும் மேற்படி அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சரின் நிதிஒதுக்கீடு மூலம் இது போன்று பல வாழ்வாதாரஉதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment