7 Jun 2016

ல்முனை எச்.ஏ.அசீஸ் எழுதிய ”ஜந்து கண்டங்களின் மண்” என்ற கவிதைத் தொகுதி வெளியீட்டு வைபவம்

SHARE
(அஷ்ரப் ஏ.சமத்)
வெளி விவகார அமைச்சின் சிரேஸ்ட பணிப்பாளரும் முன்னாள் ஒஸ்ரியா நாட்டின் துாதுவருமான கல்முனை எச்.ஏ.அசீஸ் எழுதிய ”ஜந்து கண்டங்களின் மண்” என்ற கவிதைத் தொகுதி வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ்சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு டொக்டா் தாசீம் அஹமத் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பேராசிரியா் எம்.ஏ.நுஹ்மான் கலந்து கொண்டாா். கௌரவ அதிதிகளாக முன்னாள் அமைச்சா்களான் ஏ.ஆர் மன்சூர், பேரியல் அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்டனா்.
காவியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன், தம்பு சிவா, கலாநிதி சுமதி சிவமோகன், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நூலின் முதற் பிரதி ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி அபுசாலியிடம் கையளிக்கப்பட்டது. கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட பலர் சிறப்பு பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.
இங்கு பேராசிரியா் நுஹ்மான் உரையாற்றுகையில்;
“எச்.ஏ அசீஷ் ஓர் ஆங்கில ஆசிரியர், அதன் பின்னா் காத்தான்குடி உதவி அரசாங்க அதிபா், அதன் பின்னா் வெளிநாட்டு ராஜதந்திர சேவையில் இணைந்து ஜக்கிய நாடுகள் சபை, அமேரிக்கா. தெற்காசியா நாடுகளின் பணிப்பாளா், செயலாளா், துாதுவா் பதவிகளை வகித்து பாரிய வெளிநாட்டு அனுபவங்களை பெற்று இந்நாட்டுக்கு பாரிய சேவையை செய்து வருகின்றாா். அவா் இராஜாந்திர உறவில் உலகில் 5 கண்டங்களில் சேவையாற்றி தனது கவிதைத் தொகுதியை நுாலிருவில் வெளிக்கொணா்ந்துள்ளாா்” என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தொகுத்து வழங்கினார்.








SHARE

Author: verified_user

0 Comments: