28 Jun 2016

படுவான் சமரை வெற்றி கொண்டது முனைக்காடு இராமகிருஸ்ணா

SHARE
கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில்  கடந்த 25, 26 திகதிகளில் நடைபெற்ற படுவான் சமர் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் முதலிடத்தை பெற்று வெற்றியீட்டியது.
முனைக்காடு, மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் 32 அணிகள் பங்குபற்றி இறுதிப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம், காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகம் என்பன தெரிவு செய்யப்பட்டு கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் இறுதிச்சுற்று நடைபெற்றது. 

இறுதிச்சுற்றுக்கு தெரிவாகிய இரண்டு அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்தாடி முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினர் ஜெகன் அணியினருக்கு எதிராக ஒரு கோளினை இட்டு முதலிடத்தை பெற்று வெற்றிபெற்றனர்.

இதன்போது வெற்றியீட்டிய கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும், பணப்பரிசில்களும் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த பந்துக்காப்பாளர், அதிக பந்தினை கோள்கம்பத்திற்குள் உள்செலுத்தியவர், சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த நன்னடத்தை அணி போன்றவற்றிற்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.


விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தசியந்தன் தலைமையில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் ச.வியாழேந்திரன், பாடசாலை அதிபர் யோகராணி ஞானப்பிரகாசகம், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: