7 Jun 2016

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு

SHARE

(இ.சுதா)

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஏற்பாடு செய்த வனஜீவராசுகள் வளங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு எதிராக எழுவோம்.எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு சிரமதானமும் பொலித்தீன் பாவனையை ஒழித்து உக்கக் கூடய பொருட்களிலான உறைகளை
பயன்னடுத்தல் தொடர்பாக விழிப்பூட்டும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் கடந்த வியாழக்கிழமை வித்தியாலயத்தின் முதல்வர் எஸ்.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு நிகழ்வில் மண்முனை தென் உருவில் பற்று பிரதேச செயலக சூழல் பாதுகாப்பு உத்;தியோகத்தர் ம.சதீஸ்குமார் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பொலித்தீன் பாவனையை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் மற்றும் மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட கடதாசியினால் ஆன பைகள் கடைகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டதுடன் உக்காத பொருட்களை சேகரிக்குப் பணியிலும் மாணவர்கள் ஈடுபட்டமை குறிப்பித்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: