30 Jun 2016

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மாணவர்கள்; உட்பட மூவர் பலி ஒருவர் படுகாயம்.

SHARE
அந்திக் கருக்கல் வேளையில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்  சென்ற மாணவர்கள் இருவர் உட்படமூவர் பலியாகினர். மற்றொரு குடும்பஸ்தர் படுகாயமுற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் மட்டக்களப்பு – பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்தியாய எனுமிடத்தில் புதன்கிழமை மாலை (ஜுன் 29, 2016) 6.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஜெயந்தியாய கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் கரீம் ஹஸ்மிர் (வயது 16) சனூஸ் இம்தாத் (வயது 16)   மற்றும் கூலித் தொழிலாளியான அதே கிராமத்தைச் சேர்ந்த நிஸ்தார் மிஸ்பாக் (வயது 20) ஆகியோரே கொல்லப்பட்டவர்களாகும்.

மரணமான இருவரின் சடலங்களும் வெலிக்கந்தை வைத்தியசாலையிலும் மற்றொருவரின் சடலம் பொலொன்னறுவை வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மோட்டார் சைக்கிள்களின் பின்னால் அமர்ந்து சென்ற முஹம்மத் ஷியாம் (வயது 30) என்பவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் பொலொன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: