(டிலா )
மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் புதிய இடைக்கால நிருவாக சபை ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு அதன் தலைவர் எம்.எல்.எம்.ஜமால்தீன் தலைமையில் மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் (15) நடைபெற்றது. இதில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியூ.ஏ.ஹப்பார், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப், ஆணையாளர் ஜெ.லியாக்கத் அலி உட்பட கல்விமான்கள், புத்திஜீவிகள், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட கழக நிருவாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், கழக உயர்பீட உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 40 வருட கால வரலாற்றை கொண்ட மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் நிருவாகத்தில் அதன் தலைவருக்கும் - செயலாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக புதிய இடைக்கால நிருவாக சபை அண்மையில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment