இரவு நித்திரைக்குச் சென்றபோது மயக்கமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணமடைந்து
விட்ட சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனையில் உள்ள பெண்கள் இல்லம் ஒன்றில் வியாழக்கிழமை இரவு (ஜுன் 23, 2016) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இறந்தவர் வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த அந்தோனி அனிஸ்ரா (வயது 14) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தமது பெற்றோரால் கைவிடப்பட்ட மேற்படி சிறுமி வாழைச்சேனை விபுலாநந்தபுரத்திலுள்ள பாட்டியின் பராமரி;ப்பில் இருந்து வந்துள்ள நிலையில் பின்னர் தன்னாமுனையிலுள்ள மேற்படி பெண்கள் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இந்த இல்லத்தில் இருந்தவாறு தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.
படிப்பில் திறமையான இந்த சிறுமி அடிக்கடி மனச் சோர்வடைந்து குழம்பிக் கொள்வதால், சிறுமிக்கு ஏற்கெனவே வைத்திய ஆலோசனை பெற்றதாகவும் பாட்டி தெரிவித்துள்ளார்.
அவ்வாறிருக்கும்போது வியாழக்கிழமை இரவு நித்திரைக்;குச் சென்று மயங்கிய நிலையில் சிறுமி மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அங்கு மரணமாகியுள்ளார்.
சிறுமி நஞ்சு கலந்த ஏதேனும் பொருளை உண்டாரா என பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment