14 Jun 2016

அம்பிளாந்துறை ஸ்ரீ ஞானசக்தி சித்தி விநாயகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு.

SHARE
மட்டக்களப்பு அம்பிளாந்துறை ஸ்ரீ ஞானசக்தி சித்தி விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு நாளை 2016.06.14 அன்று ஆரம்பமாகி
எதிர்வரும் 2016.06.20 ஆம் திகதி தீ மிதிப்புவைபவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

ஸ்ரீ ஞானசக்தி சித்தி விநாயகப் பெருமானுக்குவிசேட அபிசேக ஆரதணைகளுடன் ஆரம்பமாகும் இத்திருச்சடங்கு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு கும்பம் ஏற்றல் வைபவம், தோரணச் சடங்கு, அன்னையின் ஊர்வலவைபவம், தவநிலைப் பூசை, தீக்கட்டை எழுந்தருளப் பண்ணுதல், தீமிதிப்பு மற்றும் பள்ளையம் கொடுத்தல் போன்ற பூசைகள் இடம்பெறவுள்ளன.

உற்சவகாலங்களின் போது பல்வேறு விசேட கலைநிகழ்வுகளும், சமயச் சொற்பொழிவுகளும், இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: