மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை 5 வருட செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றது. இதில் வருடாந்தம் தலா ஒவ்வொரு பாடசாலையைத் தெரிவு செய்து அப்பாடசாலையிலுள்ள நூலகத்தில் சுற்றாடல்
தகவல் மையம் ஒன்றையும், உருவாக்கி வருகின்றோம். என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் கே.எச்.முத்துஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் அமைந்துள்ள நூலகத்தில் சுற்றாடல் பிரிவு ஒன்று திங்கட் கிழமை (27) திறந்து வைக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் கே.எச்.முத்துஹெட்டியாராச்சி, சுற்றாடல் மற்றும் கல்விப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஜே.ஜே.பெர்னாண்டோ, அதன் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எம்.எம்.சி.எஸ்.மல்வான, மற்றும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், போரதீவுப்பற்று பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் உட்பட மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் எனபலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
இதன் ஒரு கட்டமாகத்தான் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நாம், சுற்றாடல் தகவல் மையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு வழங்கப்பட்டுள்ள நூல்கள் சுற்றாடல் தொடர்பிலான தகவல்களைப் பெறுவதற்கும், மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைகின்றது. மத்திய சுற்றாடல் அலுவலகத்தில் சுற்றாடல் தகவல் மையம் ஒன்று அமைந்துள்ளது. அதன் சிறிய தரத்தில் இந்நூலகத்தில் சுற்றாடல் தகவல் மையம் உருவாக்கப் பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக இப்பாடசாலையில்தான் எமது அதிகார சபையினால் முதலாவது சுற்றாடல் தகவல் மையம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதில் நகர் புறங்களைத் தவித்து கிராமப்புறங்களுக்கு நாம் முன்னுரிமையளித்துச் இச்செயற்றிட்டத்தை அமுல்ப்படுத்தி வருகின்றோம்.
மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயம் மிகவும் சிறப்பான முறையில் சுhற்றாடல் செயற்பாடுகிளில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. மாணவர்களை நூலகத்தில் வைத்து வாசிக்க அனுமதிக்க வேண்டும் தற்போதைய தலைமுறையினரிடத்து வாசிப்புப் பழக்கம் குறைவடைந்துள்ளது. எனவே மாணவர்கள் எமது சுற்றாடல் பிரிவை நன்கு பயன்படுத்தி முன்னேற்றமடைய வேண்டும், பல விருதுகளைப் பெறவேண்டும். என அவர் தெரிவித்தார்.
இதன்போது பாடசாலை வளாகத்தில் அதிதிகளால் மரங்கள் நடப்பட்டதோடு, பாடசாலை அதிபரிடம் சுற்றாடல் தொடர்பான ஒரு தொகுதி நூல்களும் கையளிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment