பேரழிவு ஆயுதங்களின் (WMD) பரவலைத் தடுப்பது தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் சுங்கம், பொலிஸ், கடற்படை மற்றும் கடலோர காவற்படை உறுப்பினர்களுக்கான ஜூன் 13-17 காலப் பகுதியில் கொழும்பில் ஐந்து நாட்கள் செயலமர்வு ஒன்றினை அமெரிக்க அரசாங்கம் நிறைவு செய்தது. சர்வதேச பரவலைத் தடுப்பதற்கான நிகழ்ச்சியைச் (ICP) சேர்ந்த அமெரிக்க இராணுவ நிபுணர்களின் தலைமையில், எல்லைப் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் அச்சுறுத்தல் மதிப்பீடு போன்ற பல்வேறு தொனிப்பொருட்களை உள்ளடக்கியதாக இந்த செயலமர்வு அமைந்தது. இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பில் பரவலான ஒத்துழைப்பை உள்ளடக்கும் அமெரிக்க - இலங்கை பங்காளித்துவத்தினை வலுப்படுத்தலின் அங்கமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
0 Comments:
Post a Comment