முந்தல் பிரதேசசெயலகத்திற்குட்பட்ட புளிச்சாக்குளம் 593 கிராம சேவைபிரிவின் கீழுள்ள புளிச்சாங்குளம், வடபத்துளுஓயா, கீரியங்கள்ளி, புதுக்குடியிருப்பு, ஐஞ்சுவத்த, தாராக்குடிவில்லு கொலணி ஆகிய 6 கிராமங்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மந்த நிலையில் முன்னெடுக்கப்படுவதாக அப்பி ரதேசமக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகரதிட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் விசனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ஹக்கீம் வியாழக் கிழமை (02) காலை புத்தளத்தில் மேற்கொண்டிருந்த மக்கள் சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் மக்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
மேற்படி கோரிக்கையில், தத்தமது கிராமங்களுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதித் தொகை போதாமையினால், அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதோடு அன்றாடம் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகுவதாகவும் தெரிவித்தனர்.
அத்தோடுகுறித்த 593 கிராமசேவைபிரிவின் கீழ் ஒதுக்கப்படும் நிதி கீறியங்கல்லி பிரதேசத்திற்கு மாத்திரமே போதுமானதாக அமைகின்றமையால் இதரகிராமங்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் பிற்போடப்படுவதாகவும், அரசாங்க பாடசாலை, பொதுவைத்தியசாலை, பஸ் தரிப்பிடவசதி, வீதி அபிவிருத்தி, சுகாதார வசதிகள் என்பன முறையாக இல்லாமையினால் மக்கள் பலவித அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனித்தினியாகவோ அல்லது மூன்று கிராமங்களுக்கு ஒரு கிராம சேவைபிரிவு என்ற அடிப்படையிலோ கிராமசேவை பிரிவு அமைக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியினைகுறித்த 6 கிராமங்களுக்கும் தனித்தனியாக உரிய முறையில் வந்து சேரும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அப்பிரதேச மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அமைச்சர் ஹக்கீம் இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
மேற்படிவிடயம் தொடர்பில் முழுமையான தகவல்களை திரட்டி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸிற்கு பணிப்புரை விடுத்ததுடன், இது சம்பந்தமாக உரிய அமைச்சரிடம் பேசிதீர்வைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.றையீஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் வாபாபாறூக், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன், ஆறாச்சிக்கட்டு பிரதேசஅமைப்பாளர் கமால் உட்படகட்சிமுக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment