24 Jun 2016

பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கெமரன் அறிவித்துள்ளார்.

SHARE
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் கென்சவேட்டிவ் கட்சியின் மாநாட்டில் தமது இடத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு தாம் ஆதரவு வழங்கிய போதிலும் வேறு ஒரு பாதையில் போக வேண்டும் என பிரித்தானிய மக்கள் தெளிவான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் கப்பலின் கப்டனாக செயற்படுவதற்கு தாம் உரியவர் அல்லவென டேவிட் கெமரன் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா இல்லையா என்பது தொடர்பான சர்வஜென வாக்கெடுப்பிற்கான பிரசாரத்தின் போது எந்தெவொரு சந்தர்ப்பத்திலும் தாம் பதவி விலகப் போவதில்லை என டேவிட் கெமரன் கூறியுள்ளார்.
எனினும் வாக்கெடுப்பின் முழுமையான முடிவு வெளியாகி, சில மணித்தியாலங்களில் அவர் தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக யார் பதவியேற்கப் போகின்றார்கள் என்பது குறித்து அனைவரதும் கவனமும் தற்போது திரும்பியுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: