மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணை ஒன்றிற்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற பொலிசார் அழைப்பாணையை வழங்கிச் சென்றுள்ளதாக பா.அரியநேத்திரன் செய்திகளுக்குத் தெரிவித்தார்.
எனினும் குற்றப் புலனாய்வு பிரிவினர் எதற்காக அழைத்துள்ளார்கள் என்பது தனக்கு தெரியாது எனவும், கடந்த காலங்களிலும் இது போன்று பல தடவைகள் தன்னை கொழும்பிற்கு விசாரணைக்காக அழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment